0

குற்றாலக் குளியல்:-



குற்றாலத்தில் குளிச்சும்
கொதிக்குதடி என் மனசு,
சித்தாடை கட்டி நின்னு
கள்ளி நீ சிரித்ததாலே !

மேற்கே உதிக்கும் சூரியன்
மேனி தழுவும் நேரத்தில்,
வருவேன்னு சதிகாரி
வாய் நிறைய சொல்லிப்புட்டே !

பொய்யே நீ சொல்லியும்
அதைப்புரியாமல் நானும்,
நீ சொன்னது சத்தியமுன்னு
பாவி நான் நம்பிப்புட்டேன் !

ஊருக்குள்ள ஒரு பேச்சி
உண்மையான சொல்லாச்சி...
மச்சிவீட்டுக் காரனுக்கு,
மருமகளா போகப்போறேனு !

மதிகெட்டு நிக்கிறேன்டி
எனை மாமன்னு நீ சொன்னதாலே
மனசு எல்லாம் தவிக்கிதேடி
எனக்கு மணமாலை சூடுவாயோடி...

உன் சொல்லை நம்பிடவோ ?
ஊரார் சொல்லை கேட்டிடவோ !
குற்றாலத்தில் குளிச்சாலும்
கொதிக்குதடி என் மனசு...
--------------------------------
கவிதாயினி அருள்மொழி.
0

ஏக்கத்தின் பிரதி பலிப்பு:-

குருதியணு சக்தி இழந்து
சம கால வேலைகளைச் சடுதியாய்ச் செய்யாமல்,
சக்கரத்தில் சுற்றாத சற்று
நிலை குலைந்த இயந்திரம் போல்
செயல் தன்னில் தடுமாறும் மூளை...

உடல் சுமந்த ஆன்மா
எழுபத்தி இரண்டாயிரம் நாடி நரம்பெல்லாம்
பசி தன்னில் கதற.,
பெற்றவர், உற்றவர், வந்தவள், பிறந்தவள்
உளமதை உணராதோராய்
உதைத்திடும் தனிமை வேளை...

அறியாக் கூட்டத்தில் - நான்
அறியா மானுடனாம்
என் திறனை உணர்ந்து,
கல்வி கற்கா வேளையிலும்
எனக்களித்திட்ட கெளரவ பதவி தன்னை
பகர்வதற்கு வார்த்தையே இல்லை தோழி...

கற்பெனும் ஆண்மையை இழக்கவும் மனமின்றி,
பசியின் கொடுமைதனைப் பகரவும் வழியின்றி,
தகித்திடும் நெருப்பிலும்,
தனிமை நிலையிலும்,
நெறிதவறாது வாழ்ந்திட்டேன்.,
சதியில் வீழாது நிலைத்திட்டேன்...

சொல்தனை அம்பாக்கி,
மனந்தனைப் புண்ணாக்கி - என்
மனம் வதைத்தோரெல்லாம்
என் வெற்றியைக் காணும் நாளுக்காய்க்
காத்திருக்கின்றேன் தோழி...
----------------------------------------------
கவிதாயினி அருள்மொழி
0

பிறந்த நிமிடம்:-



பழகாத பாதையில்,
பக்குவமாய் வெளிவந்து,
பதறி துடித்திட்டேன்,
பாதுகாப்பு இல்லை என்று..

எனக்குள் இருக்கும் பயமால் - இது.
வாழ்வின் முடிவென்று என்ணி,
வாய் விட்டு கதறினேன்.,

பார்த்த அன்னை சிரித்தாள்,
ஆரம்பம் என்று...
----------------------------------------
கவிதாயினி அருள்மொழி

0

வேலை நேரதில் முகநூல்:-



கனத்த மூளையில்,
கரையானாய் அரிக்குதடி,
உன் நினைவு.
சொல்லில் சுவைஒழுக
வந்ததடி உன் பெயரே.
மனதில் மரம் கொத்தியாய்
கொத்துதடி உன் எண்ணம்.
அதனால் பயந்த பறவைபோல்
பறக்குதடி மற்ற எண்ணம்.
விரல்கள் விளையாட்டாய்
ஓடுதடி, உன்னிடம் பேச.
வேடிக்கை பார்த்த முதலாளி
வெந்து தனியிராரடி.
0

தவிக்கும் நட்பு:-





கனத்த நட்பின் இடையே.
புவிகாந்த புள்ளி போல்.
குண்டூசி முனை குத்துபோல்.
ஒரு சுரீர் இன்பம்.
சுருட்டி தவிக்க வைத்தது.
மனதையும்,உடலையும்.
சுதாரித்து நிமிரச்சொல்லி,
நட்பு நங்கென்று அடித்தது.
இருவரிடமும் நாணம்.
கனபொழுது ,காதலும்
அதன் நிணைவுகளும்.
கவணமாய் கொண்டு
சொல்லும் நட்பும்.
கடைசிவரை வேண்டும் என்ற
தவிப்பும் ,இருவரிடமும்
இணைந்தே இருந்தது.
கணத்த நட்பின் இடைய


1

நட்பு


வண்டு மொய்காத
நந்தவணம் என்கவிதை சங்கமம்
உன் கரு வண்டு காணத்தான்
இது வரை தவம் இருந்தோ
கை படாத கவிதைச் சோலையில்
உள்ளத்தில் கலர் எடுத்து
உருவத்தில் அழகூட்டி
ஒப்பனையும் செய்திட்டு
பூத்த மலர்களுக்கு
புது வடிவம் தந்த
காஜா மொய்தீனுக்கு
கணக்கற்ற நன்றிகள்
0

பிரிந்த நண்பனுக்கு:-



நட்பெனும் நந்தவனத்தில்.
நான் கொண்ட செந்தமணைத்தில்ஓடிடும் மணி தெரியாமல்
ஒன்றாய் உள்ளறிய வார்த்தைகள். இன்று வாடிக்கிடக்கிறது.
வாராய் தோழா,தொடாத மலர்களாய்.
துவண்டு விட்ட நம்மை இணைக்கும் பாலமாய்,
இனிய தேனியாய் வந்த அவனை
வார்த்தைகளில் கொன்றாயாமே.
வந்திடு நண்பா, வார்த்தைகளில் எனை கொன்றிடு நண்பா.
அதற்காக வேணும் கொடுத்து வைப்பேனா பார்ப்போம்.
நிணைவுகளை நீட்டித்து கொண்டிருக்கிறேன்.
பழகிய நாட்கள் பழங்கதை ஆகாமல்
பாதுகாக்க வந்திடு நண்பா.
பிரிந்ததாய் மற்றவர் சொல்ல உள்ளே தேடினேன்.
உறங்குவதாய் உணர்ந்தேன்
விழித்திட வேண்டுகிண்றேன்.
இணைந்திட இசைக்க வில்லை
எப்போது பிரிந்தோம் நாம்? இணைந்திட இசைக்க?
எவரும் சொல்லட்டும் பிரிந்ததாய்.நம்பிவிடாதே.

0

ஒலிக்காமல் சொல்:



நட்பு பென்னும் நந்தவனதில்
அருள்மொழி என்ற ஓரே செடியில்
அழகழகாய் புதிய, புதிய மலர்கள்
ஓவென்றும் ஒரு விதம்.
மொட்டான ஒரு நட்பு.
பூத்த புது நட்பு.
மணம் வீசிய மறு நட்பு.
உடனே உதிர்ந்த நட்பு.
உதிராமல் நின்ற சில நட்பு.
இலையாய் மாறி இணைந்த நட்பு.
தண்டாய் மாறி தழைத்த நட்பு.
வெளி உலகு அரியாத
வேர் போல் என்னுடன்,
இணைந்த நட்பு.
நீ எந்த நட்பு என்னுள்
உடனே ஒலிக்காமல் சொல்
[இங்கே பொய்யையும்,msg -ல் உண்மையும் கூட சொல்லலாம்]


0

தங்லீஷ் அடிக்கும் நண்பர்களே தைரியம் இருந்தால் பதில் தாரும்}



சொந்த மொழியில் எழுத
சொற்கள் தேடி அலைந்தோம்.
தர வேண்டிய கருத்தை
தட்டச்சில் தர தங்லீஷ்.
தாய் மொழியாம் தமிழ்மொழியை
தங்லீஷ் என்று
ஆங்கில மொழியில் அடைத்தோம்.
உலகில் சொல்லாத சொல்லெடுத்து
சுவையும், கருத்தும் கூட்டி
தனித்து நின்ற தமிழ்மொழி தந்த
பல கருத்து புத்தகம் காணாமல் போக.
தங்லீஷ் தலையில் கொண்டு
கண்டெடுத்த மீதி தமிழ் புத்தகத்தை
காணாமலே நாங்கள் போவேம்.
அடிமையை நாட்டில் கண்டு
நானிலம் மெச்ச
விடுதலை வாங்கிய வீரர்களே.
வரம் வேண்டி காத்திருங்கள்.
தமிழ் மொழியை அடிமையாக்கிடுவோம்.
விடுதலை வேட்கையோடு,
விரைவில் வர வேண்டும்,
தமிழை விடுவிக்க.
வர வேண்டிய காலம் வரும்.
வரம் வேண்டி காத்திருங்கள்.
தமிழ் மொழியை அடிமையாக்கிடுவோம்.

0

அவன் கன்னத்தில்:_



காலை எழுகையில்
காப்பி குடிக்கையில்
கன்னத்தை அணைவரும்
கவணமாய் பார்க்கையில்
ஓடிய பேன்
நள்ளிரவில் நாங்கள்
ஓன்றாய் இருந்த கதையை
ஒளிக்காமல் சொன்னது

0

நிகழாத நிகழ்ச்சி:-



கிராமத்து கிழவன் கேட்டான்:

ஆங்காங்கே ஆள் எடுப்பு
அனு குண்டு முட்டை அடை காக்க
ஆயிரம், ஆயிரம் செலவு
வராத போருக்கு வாரி இறைத்த வள்ளல்கள்
வாய்க்கரிசிக்கு வழி இல்லை
வாய்கால் தண்ணிக்கு வரதில்லை
இராணுவ பேரன் சொன்னான்:

அடைகாப்பது முட்டை பொறியாது இருக்கத்தான்
போருடை தரித்தேம், போரை தடுக்கத்தான்
நிகழகூடாத நிகழ்ச்சிக்குத்தான்
நித்தமும் செலவு
0

பஸ்டே:-


மாணவ பருவம் மகத்தான பருவம்
மனமும் உடலும் வீரு கொண்டு எழந்திடும்
கல்லூரி செல்கையில் காளையாயும்
களத்தில் குதிக்கையில் வீரனாயும்
பஸ்சை உடைக்கையில் பயில்வானாயும்
பஸ்டே கொண்டாடுகையில் தேழனாயும்
பாரில் பல டே கொண்டாட மறக்கையில்
பஸ்டே அவசியமா???
அவசியத்தின் அவசியம் உணராத வயதும் இதுவே
அவசியமற்றதை அவசியமாய் மாற்றும் வயதும் இதுவே
[யாரோ சிலர் சுய நலனுக்காய் உண்டான இதை தேவையா? உணரவும் ஒலிக்கயும்.....]
0

கவி-கவிதை:-


கவிதை என்பது இன்பதேன்.
கவிஞன் என்பவன் காணாத தேனை கண்டதாய் சொல்பவன்.
கவிதை என்பது குழந்தை.
கவிஞன் என்பவன் பெற்றோர் அல்ல பிரம்மன்.
0

சுமை:-


அணைவரும் சுமை தூக்கிகளே.
மனச்சுமை தூக்கிகளே.
பிறந்தாலும், இறந்தாலும்.
மனச்சுமைதான் என்ன ஒன்று?
உப்பாய்கரைக்க எனக்கு தெரியும்.
கல்லாய் சுமக்க மட்டுமே உனக்கு தெரியும்.
0

எனை பிரியாத மகன்:-



என்னை பிரிந்து என் மகன் இருக்க மாட்டான்
என்று உரைத்த தாய் உணராத ஓர் உண்மை.
இரு நாள் குழந்தை இரு நொடி இருக்க மாட்டான்
இரு மாத குழந்தை இருபது நிமிடம் இருக்க மாட்டான்
இரு பல் முளைக்கையில் இரண்டு மணி இருக்க மாட்டான்
இருவயதாகையில் இருநாள் இருக்க மாட்டான்
பன்னிரெண்டாகையில் பத்து நாள் இருக்க மாட்டான்
பதினாறு வயதில் இரு வரம் இருக்க மாட்டான்
இருபது வயதில் இரு மாதம் இருக்க மாட்டான்
முப்பது வயதில் முழு மாதம் இருக்க மாட்டான்
நாற்பது வயதில் நனவோடு இருக்க மாட்டான்
நாள் எல்லாம் உன்னவோடு இருக்க மாட்டான்
ஐம்பது வயதில் அழுதே தீர்த்திருப்பான்
உன் பிரிவை அழுதே தீர்த்திருப்பான்
அற்புத பெண்ணே,
விம்மி வெடித்த பாசம் எங்கே?
வீரப்பாய் நின்ற உன் நேசம் எங்கே?
உன் மகனை விட்டுக்கொடுக்காத நீ.
விலக்கி விலக்கி சென்ற
விதியின் விளையாட்டை.
விணையாய் கொள்ளாதே.
வீண்பழி சுமத்தாதே.
உன் பிற உறவின் மீது
வீண் பழி சுமத்தாதே.
பத்து மாதம் சுமந்த பாசமகணை
படிப்படியாய் பிரியாது இருந்தால்.
பக்குவமாய் எமன் உனை
கொண்டிடும் வேலையில்.
பதறியே துடித்திடுவான்.
பாரில் பைத்தியமாய் அலைந்திடுவான்.
பாசத்தை படிப்படியாய் துறந்ததனால்.
பார்தன்னில் செழித்திடுவான்.
பலர் போற்ற வாழ்ந்திடுவான்.
அவன் ஆவி உள்ளவரை
அன்னை என்ற இடத்தில்
உன்னையான்றி யாரும் இல்லை.
உறவினில் பிரிந்த உன் மகன்
உணர்வினில் உனைபிரிந்து இருக்க மாட்டான்.
[(தாயின் நிணைவு மனதை விட்டு பிரிவது இல்லை
காலசூழலால் மகன் தாயை விட்டு பிரிகிறன்)]
0

அருள்:-


குயிலுக்கு அருள் வந்தால் கூவும்
காக்கைக்கு அருள் வந்தால் கரையும்
மயிலுக்கு அருள் வந்தால்ஆடும்
மானுக்கு அருள் வந்தால் தாவும்
மனிதனுக்கு அருள் வந்தால் வேண்டாம்
அப்பாப்பா பல வழியில் அருள் வந்து விட்டது
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத !!!
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத ???
        ஏழை , பணக்காரன்
             பசி , பட்டினி
             கொலை , தற்கொலை
போதுமடாசமி மனித அருளில் விளைந்த அருள்
[நல்லவை பல நடந்து உள்ளது இல்லை என்று சொல்ல வில்லை]

0

நிஜம் எது:-


எடுத்து வைத்த அடிகளிலே
எறும்பின் காலடி சத்தத்தை
கச்சிதமாய் கேட்டிடுவேன்
பாவை வாயினில்
பக்குவமாய் சென்ற
மீனின் துடிப்பை
மீண்டும் உணர்ந்திடுவேன்
என்னுல் புகுந்த நீ
நிஜமா , நிழலா உணரமுடிய வில்லையே.
அருள்:-

இருளுக்கு அருள் கருப்பு
பகலுக்கு அருள் வெளுப்பு
நிலத்துக்கு அருள் விளைதல்
அருளுக்கு அருள் எழுதுதல்
உனக்கு அருள் சிலாகித்தல்
[அருள் என்பது ஆங்காங்கே கிடைப்பது அல்ல
ஒவ்வொரு மனிதன் உள்ளம் நினைப்பது]
0

அழைப்பு:-


இருட்டுக் கோட்டைக்கு
இன்பமாய் அழைத்தது யார்?
உண்ணாத வாய்க்கும்,
விழிக்காத விழிக்கும்,
பத்து மாதம் அன்புடன் அழைத்தது யார்?
வெளிவருகையில் பஞ்ஞபூதங்களின்
பக்குவ அழைப்பு.
காற்றின் தொடுத்லில்,நீரின் தழுவலில்
நிம்மதியுடன் அழைத்தது யார்?
அமுதகலசத்தில் அனைய அழைத்தது யார
அரைஞ்சான் நாக்கை
சுழற்ற அழைத்தது யார்?
தெரியாத அழைப்பிற்கு
புரிந்தே இசைந்தாய்.
தெரிந்தே அழைக்கிறேன்.
தேர்ந்த நட்பில், சேர்ந்தே வாழ்ந்திட.
சுழற்றிய நாக்கின் சொற்குவியலில்
உண்மை நட்பிற்கு உண்ணத அழப்பு.
உலகில் நிலைத்திடும் பாடலில் எல்லாம்
உன்னையும் சேர்த்திட அழய்த்திட்டேன்
அருமை தோழா, அழைத்ததும் வாடா..
அருமை தோழா, அழைத்ததும் வாடா
0

விழிகள் காத்திடும்:-


விழியே விழித்திரு,
விட்டு சென்றவனை நினைத்து.
வீணாக கண்ணீர் விடுவதற்கல்ல,
விடிந்திடும் உன் பொழுதிற்கு.
விழாமல் உன் கணவை காத்திட
விழியே விழித்திரு.
வீழ்ந்த எண்ணத்தில்
தேய்ந்த நினையு தன்னை
தினம், தினம் விழிதன்னில் பதித்திடு.
மறுமுறை வீழாமயக்கத்தில் சாயாமல்
விழிகள் காத்திடும்.

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes