குற்றாலக் குளியல்:-



குற்றாலத்தில் குளிச்சும்
கொதிக்குதடி என் மனசு,
சித்தாடை கட்டி நின்னு
கள்ளி நீ சிரித்ததாலே !

மேற்கே உதிக்கும் சூரியன்
மேனி தழுவும் நேரத்தில்,
வருவேன்னு சதிகாரி
வாய் நிறைய சொல்லிப்புட்டே !

பொய்யே நீ சொல்லியும்
அதைப்புரியாமல் நானும்,
நீ சொன்னது சத்தியமுன்னு
பாவி நான் நம்பிப்புட்டேன் !

ஊருக்குள்ள ஒரு பேச்சி
உண்மையான சொல்லாச்சி...
மச்சிவீட்டுக் காரனுக்கு,
மருமகளா போகப்போறேனு !

மதிகெட்டு நிக்கிறேன்டி
எனை மாமன்னு நீ சொன்னதாலே
மனசு எல்லாம் தவிக்கிதேடி
எனக்கு மணமாலை சூடுவாயோடி...

உன் சொல்லை நம்பிடவோ ?
ஊரார் சொல்லை கேட்டிடவோ !
குற்றாலத்தில் குளிச்சாலும்
கொதிக்குதடி என் மனசு...
--------------------------------
கவிதாயினி அருள்மொழி.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes