பணம்:-





                               பணம் என்னடா பணம் பணம்
                  குணம் தானடா நிறந்தரம் போன்ற பாடல்.

அரச பதவியை துச்சமென துறந்த விசுவாமித்திரன்.
புத்தர் போன்ற கதைகள் .

                                பணம் வந்ததும் நிம்மதி போனது,தூக்கம் போனது போன்ற வார்த்தைகள்.இவை போன்றவற்றிக்கு ஏமாந்து விட வேண்டாம்.அவை வேறு உண்மை உணர்த்த வந்தவைகள்.
பணம் வாழ்வாதாரம்.அது இல்லால நிலையில் மனிமதன் மனிதனாக மதிக்கப் படமாட்டான். ..

                               ஒரு சிறு ஊர் ,ஊரே ஏழைகள் நிறைந்த ஊர். அங்கு விலங்குகள் கூட நோஞ்சானாக ,திறனற்றதாக,பிறரை எதிர்க்கும் சக்தி அற்றதாக, கோழகளாக இருக்கும்.பணம் இல்லையேல் மனிதன் அடிப்படை தேவை நிறை வேறாது.. அவன் மண்ணிற்கும் ,மனதிற்கும் பாரம் ஆகி விடுகிறான்.

                                       பணம் சேர சேர ஆணவம் ,கர்வம் கண்டிப்பாக வரும்.அவற்றை துறந்து அன்பை ஏற்று தலைகனம் இல்லாமல் மற்றவர்களை மதிக்க கற்று கொண்டு பிறருக்கும் உதவ வேண்டும்.

பணம் பெருக ,குணம் பெருகனும்
குணம் பெருக, புகழ் பெருகும்
புகழ் பெருகும் போது.

                                   அதற்கு முழுதகுதியும் உள்ளவராக உன்னை ஆக்கி இருக்க வேண்டும்.
நல்ல உடை, நளினமான பேச்சி
ஆரோக்கிய உணவு,
அமைதி தவழும் இல்லம்,
அறிவில் வளர்ச்சி.

                                 இவ்வாறு பணம் வளர ,வளர நீயும் வளர வேண்டும்.பணம் அற்ற போது விலங்காய் இருந்த நீ பணம் வந்ததும் அதை காக்கும் பூதமாய் ஆகி  விடக்கூடாது.அதை அழகாய் கையாலும் மனிதனாய் மாற வேண்டும்.அப்போது அன்பை உணர வேண்டும், தர வேண்டும், பெறவேண்டும்.
                                 நான் எப்பவும் சொல்வது சம்பாதிப்பதை விட அதை காப்பது மிக முக்கியம்.
                                ஒரு நல்அறிஞசர் கூறியது. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.   
                             பணம் என்பது நம்மால், நமக்காய் உருவாக்கப் பட்ட உயிர் அற்ற, உயிர் குடிக்கும் பொருள். பணம்- இதை சம்பாதிக்கும் போதே இடை ,இடையே சரி பார்க்க வேண்டிய ஒன்று உள்ளது.ஆம் பணத்தால் வாங்க முடியாத,மீட்க முடியாத எதையும், இழந்து விடக்கூடாது”- நாம்.
                          பணம் நம் வாழ்வின் மிக உண்ணதமான ஒரு பொருள் அதை சம்பாதிக்கும் வழி முறை. அதைவிட அழகாய்,உண்மையா,உண்ணதமாய் இருக்க வேண்டும்.
                          வாழ்விற்குப் பணம் தேவை. ஆனால் அதுவே வாழ்க்கையாக இராது. உப்புப் போன்றது பணம் கையாலும் நிலை .உணவில் அளவோடு உப்பு இருந்தால் உணவு சுவையாக இருக்கும். கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காது. பணமும் எந்த அளவு இருப்பினும் அதை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என நமக்கு தெரிய வேண்டும் .பணத்தைச் சேர்த்து மனநிறைவுடன் மகிழ்ந்து வாழ்வோம்!.    

                                                         
                                   அன்பே கடவுள்
                        கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி


0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes