}“Facebook




           உண்மையில் நான் யார் {உன்னில்} பப்ளு”?.. அவள் என்னிடம் கேட்கும் போது.என் மனம் தவியாய்த் தவித்தது.
அவள் யார்?. சினிமாவில் காட்டுவது போல் என் நினைவுகள் வட்ட வட்டமாகச் சென்றது.
               என் காதலியா நாற்பத்து எட்டு வயதுஅவளுக்கு. என் காதலியாக முடியுமா.?!”முப்பது வயதுகிறுக்கனான எனக்குத் தோழியா?, ம்கூம்..! ஏதோ ஒன்று,எனக்கும் அவளுக்கும் இடையில் சிக்கித் தவித்தது. அவளிடம் பேசாத நிமிடங்களில் பேதலித்தது உள்ளம்.
                                  பப்ளு”!! என் மகன் தவிக்க வேண்டிய வயதில்.,, எனக்கு, இந்த தவிப்பு, புத்தியில் குழப்பம், மனதில் கலகம், வயிற்றில் பட்டாம் பூச்சி. எனக்கும் அவளுக்கும் இடையில், நினைவற்ற நிமிடங்களே இல்லை. தூக்கத்தில் கனவாய், விழித்து இருக்கையில் நினைவாய் வாட்டியது அவள் எண்ணம். இல்லை, இல்லை அவளை நினைக்கையில் மனம் குறுகுறு என்றது. மண்டையில் மத மதப்பு, வயிற்றில் சுறு சுறு என ஒரு சுகமான இரசாயன கலவை அதிகம் சுரந்து சுகம் தந்தது.
                 அவள் தான் அழைக்கிறாளோ. ஓடிச் சென்று போனைஎடுக்கவும் இசை வழிந்தது. என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனது. எப்படி போன்வரும் முன் அவள் அழைப்பது தெரிந்தது, எனக்கு! நானே பெருமை பட்டுக் கொண்டேன். அவளின் பப்ளு வணக்கம்டாஎன்ற சொல்லில் கரைந்து விட்டேன். நான் எங்கே? என்னை தேடுகையில் அவள் சிரிப்பில் சிதறி, காற்றில் கலந்து, சுவாசமாய் மாறி, அவள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தேன்.
                  இப்போது நான் வழிந்தேன்.. குட்டிமா..!! குட்டிமா”, நாம பார்க்கும் போது சினிமாவுக்கு போகலாமா? ம்கூம்...!! அவள் அழுத்தமாகக் கொஞ்சினாள். அவ்வப்போது அவள் வயதை நினைவுறுத்துவாள். பார்க்க சத்தியமாய் முப்பது, முப்பத்தியொன்னுதான் சொல்லலாம் என என் நண்பன் சொன்னான்..அவன் பார்த்து விட்டான் அவளை. ஒருவன் சொன்னான், ”ஏன்டா அவள் இளமையா தெரிந்தாலும்.கிழவிதானே. கெழவிகிட்ட என்ன பேச்சி”... யார் என்ன சொன்னாலும் அவளை தவிர்க்க என்னால் முடியாது.

அவளிடம் ஒரு கவிதை எழுத சொன்னேன்.
பேனா:-
ஒவ்வொரு போட்டிக்கும்
 ஒவ்வொரு பேனா.

 பல பரிசுகலாய்
 ஆசிரியர் தந்த போது
 கசந்த பேனா.


 இன்று

எண்ணத்தின் வெளிப்பாடாய்
 லட்சியத்தின் நினைவுறுத்தலாய்.

எண்ண பதிவுகளை ஏற்றதாய்
 முக்கிய கையெழுத்து பதிப்பாய்.

முகவரிக் கோட்டையில்
 முதலில் நிற்பதாய்.

ஆட்டோ கிராப்பில்
 ஆடி சிரிப்பதாய்.

வாழ்வின் எல்லை வரை
 என்னுடன் இருப்பதாய்.

இவ்வளவு உயர்ந்த பரிசாய்
தெரிந்தது நீ எனக்கு தந்த பேனா.

                      அவளுக்கு ஒரு பேனா அனுப்பி இருந்தேன்.எத்துனை அழகாய் சொல்லி விட்டால் அதை
                இன்னும் ஒரு வாரத்தில் நான் அவளைப் பார்க்கப் போகிறேன் . சூரியன் கரங்களும், சந்திரன் கரங்களும், எத்துனை முறை மாறி, மாறி என்னை தழுவியதோ..?! கணக்கற்று கனவில் மிதந்தேன். நாட்காட்டி கூட எனக்காய் அழுதது., தினம் உதிரும் என்னை மொத்தமாய் உதிர்த்தாயேடா மடையா.{அவளை பார்க்கும் நாள் வரை மொத்தமாய் கிழித்து விட்டேன்.}
                               பேஸ்புக்ல் உதித்த உறவில்ஹைய் சொன்னது  முதல் இன்று வரை மீண்டும் அசை போட்டது உள்ளம். நேரில் பார்க்கையில்நேந்துவிட்டகோழி ஆவேனோ.,! அவளுக்கும் எனக்கும் ஆன நிலைப்பாடு என்ன.? போனில் பேசிய பேச்சி, ”ஸ்கைப் ல் கண்ட காட்சி நேரில் கண்டதும் தொடருமா..!!?..காதலில் முடியுமா,நட்பாய் மலருமா.அவள் என்ன சொல்வாள்...

அன்பே கடவுள்
கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.




0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes