எஜமானனா ! வேலைக்காரனா





          பொரும் முழுமையாக படியும், தியானம் என்பதை பார்த்ததும் விழியை நகர்த்தி விட்டால், பிறகு வருத்தம் உமக்கு தான் எமக்கு அல்ல.

          தியானம் ஏன் ?
மன நிம்மதியை அடைவதற்கு தான் தியானம் .
மன நிம்மதி எப்படி போகும். ? மன நிம்மதியை நாம் தேடுகிறோம் என்றால் இருந்த ஒன்றை இழந்து விட்டோம் அது தான் மீண்டும் தோடுகிறோம். சரியா ?

எப்படி இழந்தோம் ?
           கடன் பட்டவர்கள், குடிகாரார், அல்லது குடிகாரரின் குடும்பம்,வேலை இல்லாதவர்கள்,படிக்காமல் ஊர் சுற்றுபவர்,அல்லது சுற்றியவர்.நிரந்தர நோயாளி,தினமும் வீட்டில் சண்டையிடும் குடும்பம்.இவை நம்மால் உருவக்கப்பட்டவை{இவை சரியா,ஏன் இது பற்றி வேறு கலத்தில் பார்ப்போம்}.

          இங்கு இவைகளை ஒரு பிரச்சனையாக கொள்வோம்.இப்போது இதை சமாளிக்க போவது நாம் தான். சமாளிக்கிறோம்,பிறகு ஏன் கவலை,புலம்பல்.சரி.சமாளிக்க முடிய வில்லை,வழியும் தெரிய வில்லை.கவலை படுவதால் சரியாகும் என்றால் சரி,அதுவும் இல்லை,பிறகு ஏன் கவலை.

              ஆக, பிரச்சனை சமாளிக்க முடிந்தால் கவலை வேண்டாம்.
முடிய வில்லை கவலை வேண்டாம். கவலை என்பது வேறு. சரியா ?
அதற்கான தீர்வு பற்றி நினைப்பது வேறு.

 பிரச்சனைக்கான தீர்வுக்காய் செய்ய வேண்டியவை யாவை ?
1.       பிரச்சனையை சமாளிக்க வழிகள் என்ன ?என்ன.
2.       பிரச்சனை அதிக பச்சம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.
3.       பிரச்சனை விளைவால் ஏற்படும்  பாதிப்பை சமாளித்தால் போதுமா.
  சரி எதுவும் முடியாது என்ன செய்ய. எதுவும் முடியாத போது கவலை படவும் முடியாது என்று கவலையும் சேர்த்து விட்டு விடவும்.சரியா!.

                இப்போது அப்படி எல்லாம் விட முடியாது என்று படாத பாடு படுத்தும் மனதை அமைதி படுத்த அந்த அமைதின் மூலம் ஓர் தீர்வு காண தான்

                 தியானம்

இப்போது தியானம் என்றால் என்ன பார்ப்போம்.
   மனம் இது அனைவருக்கும் உள்ள ஒன்று. அது ஒரு வேலைக்காரன் தெரியமா ?
  ஓ தெரியுமா

ஆனால் அதற்கான எஜமான் யார் ?அது தான் தெரியாது.
சரி விடும்.அது தான்        
               நாம் என்கிற சுயம்.
எஜமானன் பலம் குன்றி இருப்பதால் அல்லது காணாமல் போயிருப்பதால் வேலைக்காரன் ஆட்டம் போடுகிறான்.
இப்போது வேலைக்காரனை அடித்து விரட்ட கூடாது.அவன் நமக்கு வேண்டும் கண்டிப்பாய்.அவன் கொட்டத்தை அடக்கினால் போதும்.அது தான் தியானம்.

         எஜமானன் இழந்ததை, அதன் பலத்தை மீட்டு எடுக்க வேண்டும்.அது தான் தியானம்.
கொட்டத்தை அடக்கி நம் பலத்தை காட்டி, அவனை வேலை செய்ய வைக்க வேண்டும் அதுவே தியானம்.
 மனம் என்னும் வேலைக்காரன் கூச்சலிட்டு கொண்டே, புலம்பி கொண்டே இருந்து.எஜமானனை கவலை சங்கிலியால் கட்டி விடுகிறான்.

      தற்போது அவனை கட்டுபடுத்த வேண்டும்.எஜமானன் என்று நான் உள்ளேன். என்பதை உணர்த்த வேண்டும்.நம்மை கவனிக்க வைக்க வேண்டும்.பிறகு நாம் சொல்வதை கேட்க வைக்க வேண்டும்.இவை தான்

                 தியானம் 

தியானம் ஏன்,தியானம் என்றால் என்ன தெரிந்து விட்டது.அதை எப்படி செய்வது. மிக சுலபம் முதலில் வேலைகாரனை{மனம்} கவனிக்க ஆரம்பிக்கவும்.இவ்வளவு நாள் வேலைகாரனோடு ஒன்றி இருந்த எஜமானனுக்கு{நாம்} அவனுடன் தொடர்ந்து போக தோன்றும்.கூடாது.நாம் விருப்பு, வெருப்பு அற்று நமது எண்ணங்களை கவனிக்கலாம்.அல்லது அப்படியே விட்டு விடலாம்.

   தியானம் மேற்கொள்ள நம் உடல் மற்றும் மனம் சம்பந்த பட்ட செயல்களை நிருத்த வேண்டும்முதலில்.முதலில் உடல் இயக்கத்தை நிருத்தி புவியீர்ப்பு விசையின் நேரடி தாக்குதலை தவிர்க்க ஏதோ ஒரு தடுப்பை பயன் படுத்தி{மெத்தை,கணத்ததுணி,போர்வை. இவைகளை போன்று வெள்ளை அல்லது வெளிர் நிறமாக இருத்தல் நல்லது.படுத்து உறங்க பயன்படுத்தாத பொருளாக இருக்க வேண்டும்}அதில் அமைதியாக அமர்வதே தியானத்தின் முதல் நிலை.

        இரண்டாம் நிலை எந்த மந்திரமும் சொல்ல வேண்டாம்.அமைதியாக கண்ணை மூடி அமர்வதால் பல எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும். அது இருக்கட்டும் நாம் செய்ய வேண்டியது.நமது மூச்சி காற்றை கவனிக்க வேண்டும்.{ நாமாக மூச்சை இழுத்து விட வேண்டாம்.இயற்கையாய் நடப்பதை கவனித்தால் போதும்}

    இப்போது உங்கள் எண்ணங்கள் உங்களுக்குள் சில 50,அல்லது 100,அல்லது 150 அட மிக,மிக, அதிகமாக எவ்வளவு எண்ணங்கள் உருவாகும் ?.முக்கியாமான ஒன்று.அப்படி எழும் எண்ணங்களுக்கு பதில் தேட வேண்டாம்.இரண்டாவது அதை பொருட்படுத்த வேண்டாம்.அந்த எண்ணங்கள் திறக்காத வீட்டின் கதவை தட்டிய நபர் போல் போய் விடும்.காலங்கள் செல்ல, செல்ல எண்ணங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் {முக்கயமான விசயம் எண்ணங்கள் பற்றியோ,அவற்றின் எண்ணிக்கை பற்றியோ குறிப்பாக அவை  குறைகிறதா என்பது பற்றியோ கவனம் கொள்ள கூடாது.} எண்ணங்கள் கூடுகிறதா குறைகிறாதா என்பதை நீங்கள் கவனிக்க தேவை இல்லை.நீங்கள் கவனிக்க வேண்டியது உமது மூச்சி காற்றின் இயற்கையான நிலையைதான். அதுவும் குறைய ஆரம்பிக்கும். நெற்றி புள்ளியில் ஒரு புள்ளியாய் ஒடுங்கும். சமாதி நிலை அல்லது முக்தி நிலை என்பது இதை தான். 

    நாம் ஒளி பிரவாகமாய், எண்ண சக்திகளின் கூட்டாய், நினைத்ததை செய்யும் ஆற்றல் கொண்டவராய், பிரபஞ்ச சக்தியாய் மாறுவோம். இது உன்னாலும் என்னாலும் முடியும் தோழா. முயல்வோம் இன்றே.
                                          அன்பே கடவுள்
                        கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes