எனை பிரியாத மகன்:-



என்னை பிரிந்து என் மகன் இருக்க மாட்டான்
என்று உரைத்த தாய் உணராத ஓர் உண்மை.
இரு நாள் குழந்தை இரு நொடி இருக்க மாட்டான்
இரு மாத குழந்தை இருபது நிமிடம் இருக்க மாட்டான்
இரு பல் முளைக்கையில் இரண்டு மணி இருக்க மாட்டான்
இருவயதாகையில் இருநாள் இருக்க மாட்டான்
பன்னிரெண்டாகையில் பத்து நாள் இருக்க மாட்டான்
பதினாறு வயதில் இரு வரம் இருக்க மாட்டான்
இருபது வயதில் இரு மாதம் இருக்க மாட்டான்
முப்பது வயதில் முழு மாதம் இருக்க மாட்டான்
நாற்பது வயதில் நனவோடு இருக்க மாட்டான்
நாள் எல்லாம் உன்னவோடு இருக்க மாட்டான்
ஐம்பது வயதில் அழுதே தீர்த்திருப்பான்
உன் பிரிவை அழுதே தீர்த்திருப்பான்
அற்புத பெண்ணே,
விம்மி வெடித்த பாசம் எங்கே?
வீரப்பாய் நின்ற உன் நேசம் எங்கே?
உன் மகனை விட்டுக்கொடுக்காத நீ.
விலக்கி விலக்கி சென்ற
விதியின் விளையாட்டை.
விணையாய் கொள்ளாதே.
வீண்பழி சுமத்தாதே.
உன் பிற உறவின் மீது
வீண் பழி சுமத்தாதே.
பத்து மாதம் சுமந்த பாசமகணை
படிப்படியாய் பிரியாது இருந்தால்.
பக்குவமாய் எமன் உனை
கொண்டிடும் வேலையில்.
பதறியே துடித்திடுவான்.
பாரில் பைத்தியமாய் அலைந்திடுவான்.
பாசத்தை படிப்படியாய் துறந்ததனால்.
பார்தன்னில் செழித்திடுவான்.
பலர் போற்ற வாழ்ந்திடுவான்.
அவன் ஆவி உள்ளவரை
அன்னை என்ற இடத்தில்
உன்னையான்றி யாரும் இல்லை.
உறவினில் பிரிந்த உன் மகன்
உணர்வினில் உனைபிரிந்து இருக்க மாட்டான்.
[(தாயின் நிணைவு மனதை விட்டு பிரிவது இல்லை
காலசூழலால் மகன் தாயை விட்டு பிரிகிறன்)]

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes