மனிதம் :-



நரேன் ரயில் நிலையம் கடந்து போகும் போது எல்லாம். ஒரு கிழவி சாமி தர்ம துறை என்பால் இவனும் ஒரு ரூபாய் போட்டு போவான்.இன்று மாலை இரயில் ஏறியதும் நினைத்தான் அந்த குரல் சமீபமா கேட்கவே இல்லையே.நாமும் காசு தரலை.இருக்காளா,போயிட்டாலா ?
                சாமி தர்ம துறை திடுக்கிட்டவன் உணர்ந்தான் 3 நாள் முன் நினைத்தோம்.பிறகு மறந்தே போனோம்.கிழவி பக்கத்தில் போய் இத்தனை நாள் எங்க போன.
              இங்க தான் சாமி இருக்கேன்.
               பின் ஏன் கூப்பிடலை.
சாமி நீங்களே பொண்டாட்டி ஊருக்கு போன வருத்ததில் இருக்கும் போது நான் ஏன் சங்கட படுத்தனும்ன்னு தான்.
            உனக்கு எப்படி தெரியும்.
 கையில் சாப்பாட்டு பையும்,முகத்தில் புது பொலிவும் 8 நாளா காணலையே சாமி.
                     10 ரூபாய் கொடுத்தான்,பிச்சை எடுக்கும் கிழவிக்கு எவ்வளவு கவனம் ,திறமை,மனிதாபிமானம்.மனிதம் மனதில் இருகிறது.பணத்திலோ,படிப்பிலோ இல்லை.

                                         அன்பே கடவுள்
                                                                  கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.


0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes