(1)காதல் கிள்ளல்:




                           கடற்கறை மனலில் அவன் மடியில் சுமி சுருட்டி கொண்டு படுத்து இருந்தாள் .
                                          முகேஸ் அவள் தலையை கோதினான், கண்ணம் நிமிண்டினான்.கையை மெல்ல கீழே கொண்டு வர அவள் தடுக்க வில்லை.முகேஸ் திடுக்கிட்டான்.சுமி ரசிக்கிறாளா!?.இல்லை வேறு நிணைவில் உள்ளாலா.அவள் முகத்தை கவணமாய் பார்த்தான் சினுங்குகிறாளா.இருட்டில் முழுமையாய் தெரிய வில்லை.
                                        அவள் தடுத்து இருந்தாள் செல்லமாக மீறி இருப்பான். அமைதி எங்குமே அச்சத்தை தான் ஏற்படுத்தும் போல்.சுமி செல்லம் காதில் கிசு கிசுத்தான்.அவள் எழுந்து அமைர்ந்தாள்.சற்று தூரம் நடந்து வருவோமா முகில்.அவள் அப்படித்தான் செல்லமாக அழைப்பாள்.காதலி வைத்த பெயரே கற்கண்டாய் இனித்தது காதில். தோளில் கைபோட்டு கொண்டு நடந்தார்கள் இருவரும்.அவன் செல்லமாக இடுப்பில் கிள்ளினான்.அவள், அவன் தோளில் சாய்ந்தாள்.

மெரினா கடற்கரை மெல்லிய வெளிச்சம்.பலூன்காரன் மூட்டை கட்டி விட்டான்.பகலில் விரித்த கடை எல்லாம் போய் இரவு வேறு, வேறு கடைகளாய் காட்சி அளித்தது.இருட்டில் மறைந்த கடல்நீர், சப்தம் வழியே வெளிப்பட்டது”.

                  கப்பல் விளக்குகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் அழகாய் ஒருபுறம். மறுபுறம் சாலை கடந்து சன்ன வெளிச்சமாய் பரவி கிடந்த  இருட்டில் தலை நீட்டி சிரித்த மஞ்சள் விளக்குகள்.மேனி தழுவும் தென்றல்,நாசி தழுவும் வாடை என மெரினா மெய்சிலிக்க வைத்தது”.
                                       பக்கத்தில் என்னவள் இருப்பதாலோ இத்தனை அழகு.என்றவன் எண்ணி மகிழ்ந்தான்.
                                ஆவி பறக்க இட்லி சுடும் கடை, இரவில் ஏனோ, அதன் ருசி அலாதியானது தான்.ஆள் தேடும் படலம் கூட அரங்கேறி கொண்டு இருந்தது.எத்துணை, எத்துணை மனிதர்களை இந்த மெல்லிய இருட்டிலும் மென்மையாய் காண முடிந்தது.அந்த மணல் வெளியில் ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.ஒட்டியபடி.

                                     அவள் ஸ்பரிசம் அவனை உசுப்பேற்றியது. கச்சிதமாய் உடல் மறைத்த சுடியிலும் அங்கங்கே உடல் நெளிவுகள் தெரிய அழகு பதுமையாய் மெல்லிய புன்சிரிப்புடன் பக்கத்தில் அமர்ந்து அவன் மேல் கை வைத்தாள். அவள் கைப்பட்ட நிமிடம் அத்துணை குளிரிலும் சூடாகி போன உடல், சில்லிட்டு போன மனம். குரல் தழு தழுக்க சுமி..என்று அழைத்தான்.மெதுவாய் அவள் தோல் பற்றி,மடிசாய நினைத்தான்.
           படக்கென அவள் நகரவும், ஏன் நினைக்கும் முன். அப்பவும், எப்பவும் மாறாத ஒரு குரல் அண்ணே சுண்டல்,முருக்கு வேணுமா ?

                         உலகில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையும் சேர்த்து அவன் தலையில் கொட்ட வேண்டும் போல் கோபம் அந்த சுண்டல் காரன் மேல் அவனக்கு. 

அன்பே கடவுள்.
கவிதாயினிபில்டெக்  சீ.அருள்மொழி.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes