(1) நமக்காய் வாழ் அம்மா:-





             அம்மா,அம்மா செளமி அழைத்தால்.அம்மா வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அதே சமயம் கொஞ்சலாக,அம்மா என்று மீண்டும் அழைத்தால்.
என்னம்மா செளமி அம்மா கேட்க.

              இன்று {New year}புது வருட நாள்  அதனால் ஆபீசில்  சின்ன பார்ட்டி. 1 மணிக்கு வந்துடுவேன்.அதான் முன்பே சொன்னேனே.

                    இல்லமா ,போய்தான் ஆகணுமா ?பகல்ன்னா பரவா இல்லை, இரவில் அதான் அம்மா இழுத்தால்.

செளமி பெரும்பாலும் இதற்கொல்லாம் கோபப்பட்டு விடுவாள்.இப்போது மென்மையாய் அம்மாஉனக்கு என்ன பயம் ? நகை ஏதும் போட்டு போகலை. சோ திருடர் பயம் இல்லை. பிரண்{Friend} கூட போறதால யாரும் கடத்திடு வாங்களோன்னு பயம் இல்லை.வீடு வரை வந்து விட்டுட்டு போக சொல்றேன்.

                                         அது இல்லைமா, அம்மா தடுமாறினால்.
செளமி தெளிவாக சொன்னால்.அம்மா கற்பு போயிடும்ன்னா. அதுக்கு இரவு பகல் கிடையாது. படுக்கை பகலிலும் விரியும்.அது ஆண் ,பெண் சம்பந்தபட்டது. பகலில் யாருடனும் படுக்க முடியதா ?
அல்லது கற்பழிப்பு பகலில் நடக்காதா ?

   ஏம்மா இப்படி எல்லாம் பேசுற அம்மா குறிக்கிட்டால்.
                            பிறகு நீ எதுக்கு பயப்படற.செளமி கேட்டு கொண்டே தொடர்ந்தாள் .அக்கம் பக்கம் தப்பா பேசுவாங்க அதான் உன் அடுத்த பிரச்சனையா ?


                 நாம் எல்லா மனிதர்களையும் அனுசரிச்சி தான் வாழனும் இல்லைன்னு சொல்லலை. நான் தினமும் லேட்டா வந்தா, அவர்கள் நியாயம் பேசலாம்.ஆனா இன்று ஊரே கொண்டாடும் ஒரு விழா.இந்த விழா சரியா, தவறா. மேலை நாட்டு விழா தேவையா,இல்லையா. இது பற்றி பிறகு ஒரு நாள் நிதானமாக பேசலாம்.

             செளமி அழுத்தமாக சொன்னால். வாழ்வில் மற்றவரையும் அனுசரித்து வாழனும் ஆனாமற்றவர்களுக்காகவே வாழ்ந்துட கூடாது நீ எப்பம்மா புரிஞ்சிப்ப.
              அம்மாவிற்கு தன் மகள் தகப்பன் சுவாமியாய் காட்சி அளித்தாள்.
                                           அன்பேகடவுள்
                             கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes