ஏக்கத்தின் பிரதி பலிப்பு:-

குருதியணு சக்தி இழந்து
சம கால வேலைகளைச் சடுதியாய்ச் செய்யாமல்,
சக்கரத்தில் சுற்றாத சற்று
நிலை குலைந்த இயந்திரம் போல்
செயல் தன்னில் தடுமாறும் மூளை...

உடல் சுமந்த ஆன்மா
எழுபத்தி இரண்டாயிரம் நாடி நரம்பெல்லாம்
பசி தன்னில் கதற.,
பெற்றவர், உற்றவர், வந்தவள், பிறந்தவள்
உளமதை உணராதோராய்
உதைத்திடும் தனிமை வேளை...

அறியாக் கூட்டத்தில் - நான்
அறியா மானுடனாம்
என் திறனை உணர்ந்து,
கல்வி கற்கா வேளையிலும்
எனக்களித்திட்ட கெளரவ பதவி தன்னை
பகர்வதற்கு வார்த்தையே இல்லை தோழி...

கற்பெனும் ஆண்மையை இழக்கவும் மனமின்றி,
பசியின் கொடுமைதனைப் பகரவும் வழியின்றி,
தகித்திடும் நெருப்பிலும்,
தனிமை நிலையிலும்,
நெறிதவறாது வாழ்ந்திட்டேன்.,
சதியில் வீழாது நிலைத்திட்டேன்...

சொல்தனை அம்பாக்கி,
மனந்தனைப் புண்ணாக்கி - என்
மனம் வதைத்தோரெல்லாம்
என் வெற்றியைக் காணும் நாளுக்காய்க்
காத்திருக்கின்றேன் தோழி...
----------------------------------------------
கவிதாயினி அருள்மொழி

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes